3 குழந்தைகளுக்கு தாய் தீக்குளித்து தற்கொலை - மகளின் மரணத்தில் சந்தேகம் - பெற்றோர் புகார்..

x

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே 3 குழந்தைகளுக்கு தாயான இளம்பெண் தீ குளித்து தற்கொலை செய்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

வாலாஜாபாத் அடுத்த கண்ணடியன் குடிசை பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் சூர்யா தம்பதிக்கு கடந்த 2016 ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், சூர்யா தனது வீட்டு மாடி அறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கணவர் குடும்பத்தினர் சூர்யாவை தீயிட்டு கொளுத்தி கொலை செய்த‌தாக சூர்யாவின் பெற்றோர் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் சூர்யாவிற்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், தற்கொலை சம்பவம் நடந்துள்ளதால் போலீசார் தரப்பில் கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ளனர்.

இதையடுத்து, சூரியா மரணம் தொடர்பாக காஞ்சிபுரம் கோட்டாட்சியர், இரு குடும்பத்தினரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்