மகளின் காதல் விவகாரத்தால் சக மாணவனை அழைத்து சென்று கழுத்தறுத்து கொன்ற தாய், தந்தை, சகோதரன் - தேனியில் பயங்கரம்

x

தேனியில் 12 ஆம் வகுப்பு மாணவன் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மாணவியின் தாய், தந்தை உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். தேனியில் 12 ஆம் வகுப்பு மாணவன் கமலேஷ்வரன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், அதே பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவரை மாணவன் காதலித்து வந்ததாகவும், அந்த மாணவியின் தரப்பினரே மாணவனை கொன்றதாகவும் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதனடிப்படையில், மாணவியின் தந்தை சன்னாசி, தாய் தமிழ்செல்வி மற்றும் சகோதரர் ஜெயப்பிரகாஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மகளை காதலித்ததனாலேயே மாணவனை கொன்றது தெரியவர, மூவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்