தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் மகன் இறந்த இடத்தை பார்த்து கதறி அழுத தாய் -கலங்கவைக்கும் காட்சிகள்

x

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுடன் அவர்களது குடும்பத்தினர் ஊர்வலமாக சென்றனர்.

தூத்துக்குடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா கெஜதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இது குறித்து ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில், 17 அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் ஸ்டெர்லைட் ஆலையினை மூட வேண்டும் எனவும் கோரி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் ஊர்வலம் சென்றனர். இதில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுடன் அவர்களது உறவினர்களும் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற ஊர்வலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்