காணாமல் போன மகளை கண்டுபிடித்து தர கோரி கதறி அழுத தாய்..- ஆட்சியர் முன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

x

காணாமல் போன மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி இரு பெண்மணிகள், காஞ்சிபுரம் ஆட்சியரிடம் மனு வழங்கிய போது மயங்கி விழுந்தனர். திருக்காலி மேடு சாலியர் தெரு பகுதியை சேர்ந்தவர் சித்ரா, தமது 17 வயது மகள் 11 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில் காணாமல் போனதாக புகார் கூறியுள்ளார். இதே போல், அவரது தங்கையின் 14 வயது மகளும், காணாமல் போனதாக ஆட்சியர் ஆர்த்தியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இருவரும் தங்கள் மகள்களை விரைவாக கண்டுபிடித்து தர வேண்டும் என கதறி அழுதவாறு மனுவை வழங்கினர். அப்போது சித்ரா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்