"Most Wanted அணி.. வசதியான அணி...ஒரு கூரை போட்டு இருக்கலாம்..." - அமைச்சர் உதயநிதி பேச்சு

x

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியும், சென்னை மேற்கு மாவட்ட திமுகவும் இணைந்து நடத்தும் மின்னொளி கால்பந்தாட்ட போட்டி இன்று தொடங்கியது. போட்டியை தொடங்கி வைத்துப் பேசிய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டு அணி, புதிதாக தொடங்கப்பட்டதாக இருந்தாலும், கட்சியில் மோஸ்ட் வாண்டட் அணியாக உள்ளது என்று கூறினார். வசதியான அணியாக இருந்தாலும், ஒரு கூரையாவது போட்டு இருக்கலாம் அல்லது மாலை நேரத்தில் போட்டியைத் தொடங்கி இருக்கலாம் என்று வெயிலைத் தாங்க முடியாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்