14 நிமிடத்தில் 37 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News|(29.03.2023)

x
    • ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் 98% பட்டதாரிகள் தோல்வி அடைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
    • தேர்வு எழுத தகுதி பெற்ற 4 லட்சம் பேரில், சுமார் 1.5 லட்சம் பேர் தேர்வுக்கே வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த தேர்வானது 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது


  • தனி நீதிபதியின் தீர்ப்பு இறுதியானது அல்ல என்றும், தாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிப்போம் எனவும், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
  • சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலா, தினகரன் என அனைவரையும் ஒன்றிணைத்து அதிமுகவை வலுப்படுத்துவோம் என்றும் கூறினார்.

  • நாட்டிலுள்ள அரசு அமைப்புகளின் நம்பகத்தன்மையை சீர்குலைக்க சதி வலை பின்னப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
  • பாஜக தலைமை அலுவலகத்தின் புதிய கட்டிடங்களை திறந்துவைத்து பேசிய அவர், ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுத்தால் அந்த நிறுவனங்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவதாக கூறினார்.

  • கடன் செயலிகள் மூலம் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ ப்ரைன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த மத்திய இணை அமைச்சர் பக்வத் கரட், இந்தியாவில் ஆயிரத்து 100 கடன் செயலிகள் நடைமுறையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்