13 நிமிடத்தில் 49 செய்திகள் : தந்தி காலை செய்திகள் | Morning News | Speed News (23.02.2023)

x
  • அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு.... இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது...


  • ஈரோடு கிழக்கு தொகுதியில், அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு.. இஸ்லாமிய பெண்களிடம் உருது மொழியில் பேசி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..

  • வழக்குகள் தனக்கு ஒன்றும் புதிது அல்ல என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி... தேர்தல் நேரத்தில் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலைக்காது எனவும் கருத்து...


  • ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து வரும் 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவிப்பு...

  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கவில்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து... தமிழ்நாட்டின் மீது உண்மையான அன்பு கொண்டிருப்பதால்தான் 4 மாநில ஆளுநர்களாக தமிழர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் விளக்கம்..


  • பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்தின் கணவர் ஆதில் கான் மீது ஈரானிய பெண் பலாத்கார வழக்கு... ஆதில் கானை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மைசூர் நீதிமன்றம் அனுமதித்ததால், கதறி அழுத ராக்கி சாவந்த்...


உத்தரகண்ட் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி... டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட இந்தியாவின் சில பகுதிகளில் உணரப்பட்ட நில அதிர்வு......


Next Story

மேலும் செய்திகள்