தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (07.12.2022)

தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (07.12.2022)
x

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறியது.... சென்னைக்கு ஆயிரத்து 20 கிலோமீட்டர் தொலைவில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.... காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு........

தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு..

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் எதிரொலி... சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.... மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை...

தமிழகத்தில் வரும் 8ம் தேதி கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால், தலைமைச்செயலாளருடக் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் சந்திப்பு.. பேரிடர் மீட்பு மைய செயல்பாடுகளை தீவிரப்படுத்துதல், வெள்ள பாதிப்பு தடுப்பு குழுக்களை தயார் நிலையில் வைத்திருப்பது குறித்து ஆலோசனை.....

மாண்டஸ் புயல் எதிரொலியாக தமிழகத்தில் வரும் 9-ம் தேதி பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை.... மாநில அரசுகளுக்கு தேவையான உதவியை மத்திய அரசு முழுமையாக வழங்கும் என மத்திய அமைச்சரவைச்செயலாளர் ராஜீவ் கவுபா உறுதி...

கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நம்பிக்கை.... அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்கும் என அறிவிப்பு........Next Story

மேலும் செய்திகள்