Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-11-2022) | Morning Headlines | Thanthi TV

x

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை....

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர்ர் ஸ்டாலின் கடிதம்...


முதல்வர் பதவியை தந்த சசிகலாவுக்கு துரோகமிழைத்தவர் ஈபிஎஸ் என ஓபிஎஸ் குற்றச்சாட்டு...

தான் அளித்த ஆதரவால் ஆட்சி காப்பாற்றப்பட்ட நிலையில், தனக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை எனவும் குற்றச்சாட்டு...


பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு...

5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 3 நீதிபதிகள் ஒப்புதல்...


10 சதவிகித இடஒதுக்கீடு ஏற்புடையது அல்ல என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் கருத்து...

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரை தவிர்த்திருப்பது அரசியலமைப்பு சாசனத்தை மீறுவதாக நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பு...


10 சதவிகித இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு...

இட ஒதுக்கீடு விவகாரத்தில் சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் குற்றச்சாட்டு...


இந்தி திணிப்பை தேமுதிக எதிர்க்கிறது...

கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு...


கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை...

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களின் வீடு, அலுவலகங்களில் அதிரடி....


Next Story

மேலும் செய்திகள்