பெட்ரோலில் பாதிக்கு மேல் தண்ணீர் - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

x

பெட்ரோலில் பாதிக்கு மேல் தண்ணீர் - அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள் | Petrol | Water | Salem

முள்ளுவாடி கேட் பகுதியில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் நிலையத்தில் மதியழகன் என்பவர் 500 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி சென்றுள்ளார். ஆனால் வண்டி பாதியில் நிற்கவே, உள்ளே பார்த்த போது பெட்ரோலுடன் தண்ணீர் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக பெட்ரோல் நிலையம் வந்த அவர் அங்கு தண்ணீர் கேனில் பெட்ரோல் பிடித்துள்ளார். அதிலும் தண்ணீர் கலந்தது தெரிய வந்த நிலையில் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெட்ரோல் நிலைய உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காலை முதலே ஏராளமான பொதுமக்கள் இங்கு பெட்ரோல் நிரப்பி சென்ற நிலையில், பலரது வாகனங்கள் பழுதடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையத்திற்கு படையெடுத்துள்ளனர். ஆனால், சேலத்தில் கனமழை பெய்து வருவதால் பெட்ரோல் டேங்கிற்குள் தண்ணீர் கலந்திருக்கலாம் என்று பெட்ரோல் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்