குஜராத் மோர்பி பாலம் கோர விபத்து..உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு

x

குஜராத் மோர்பி பாலம் கோர விபத்து..உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு

மோர்பியில் மச்சு ஆற்றுக்கு மேலிருந்த தொங்கு பாலம் மாலை 6:30 மணியளவில் சரிந்து விழுந்ததுள்ளது. பாலத்திலிருந்தவர்கள் சரிந்து நீருக்குள் விழுந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த போது பாலத்தில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த‌தாக கூறப்படுகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மோர்பியில் வரலாற்று சின்னமாக பார்க்கப்பட்ட 765 அடி நீளம் கொண்ட இந்த தொங்கு பாலம், 1879-ல் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் திறக்கப்பட்டது. 144 ஆண்டுகள் பழையான பாலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் பழுது பார்க்கும் பணியையும், புதுப்பிக்கும் பணியையும் மேற்கொண்டது. கடந்த அக்டோபர் 26 அன்று குஜராத் புத்தாண்டின் போது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட பாலம் விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே விபத்து தொடர்பாக பிரதமர் மோடி குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடனும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவியிடம் பேசி நிலையை கேட்டறிந்தனர். மாநில அரசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. பிரதமர் மோடியும், உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்