"மோன்டே கார்லோ" கார் பந்தயம் - மலைப் பகுதியில் சீறிப்பாயும் வீரர்கள்..

x

பிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் மோன்டே கார்லோ கார் பந்தயத்தில் பிரான்ஸ் வீரர் செபாஸ்டியன் ஒகியர் (Sebastien Ogier) முன்னிலை வகித்து வருகிறார்.

18 சுற்றுகளாக மோன்டே கார்லோ கார் பந்தயம் நடைபெற்று வருகிறது.

இதில் 12 மற்றும் 13வது சுற்றில் பெல்ஜியம் வீரர் நெவில்லியும், 14ம் சுற்றில் பின்லாந்து வீரர் ரோவன்பெராவும் வெற்றி வாகை சூடினர்.

14 சுற்றுகளின் முடிவில் ஒட்டுமொத்தமாக பிரான்ஸ் வீரர் செபாஸ்டியன் ஒகியர் முன்னிலையில் உள்ளார்.

மலைப்பாங்கான பகுதியில் வீரர்கள் சீறிப்பாய்ந்தது, பார்வையாளர்களைக் கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்