அரசு அதிகாரிகள் போல் நடித்து பணமோசடி...லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சோகம் ..பின்னர் போலீஸ் செய்த பலே காரியம்

x

கோவையில், 12-ம் வகுப்பு முடித்து தனியார் கல்லூரிகளில் சேரவிருந்த மாணவர்களின் பெற்றோரை ஒரு கும்பல் தொடர்பு கொண்டு, அரசு அதிகாரிகள்போல் பேசி, ஆன்லைன் மூலம் பண மோசடி செய்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், நாமக்கல்லை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப், சிம் கார்டு, காசோலை புத்தகத்தை பறிமுதல் செய்தனர். அரசு அதிகாரிகள் என கூறி ஸ்காலர்ஷிப் கிடைத்துள்ளதாக பேசியதால், அதை நம்பி அவர்கள் அனுப்பிய கியூஆர் கோடு மற்றும் லிங்கை கிளிக் செய்தபோது, வங்கிக்கணக்கில் இருந்த பணம் எடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர். ஆன்லைன் மோசடி தொடர்பாக இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 7 லட்சம் ரூபாய் வரை பணத்தை இழந்தது தெரியவந்துள்ளதாகவும், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்