மோடியின் திடீர் தமிழ் பாசம்...தமிழர்கள் மத்தியில் எடுபட்டதா?

x
  • தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியரின் மொழி - பிரதமர் மோடி
  • எங்கு சென்றாலும் தமிழ் மொழி குறித்து பேசும் பிரதமர் மோடி
  • நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவிய பிரதமர் மோடி
  • தமிழகம் இந்திய வளர்ச்சியின் என்ஜின் - பிரதமர் மோடி
  • "கூட்டாட்சி தத்துவத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது"

தமிழ் மொழி நம்முடைய மொழி, அது ஒவ்வொரு இந்தியரின் மொழி என்கிறார் பிரதமர் மோடி. எங்கும் தமிழ் மொழி பெருமை பேசும் பிரதமர் மோடி, சுதந்திரத்தின் போது தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோலை நாடாளுமன்றத்தில் நிருவினார். செங்கோலுக்கு முன்பாக தரையில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி, ஆதீனங்கள் வேத மந்திரங்கள் ஓத, திருஞானசம்பந்தரின் கோளறு பதிகம் பாடல்கள் ஒலிக்க செங்கோலை நிருவினார். அப்போது தமிழகத்தையும்,, தமிழக வரலாற்றையும் பெருமையாக குறிப்பிட்டு பேசினார். பாஜக - காங்கிரஸ் அதிக நாட்டம் காட்டும் தமிழகம், 39 நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலம் தாண்டி இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட மாநிலமும்கூட.

ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும் மாநிலத்தில் வேளாண் திட்டங்கள், எய்ம்ஸ் மருத்துவமனை, பொருளாதார வழித்தடங்கள், ரயில் திட்டங்கள், விமான நிலைய உள்கட்டமைப்புகளில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகம் வளரும் போது இந்தியாவும் வளரும் எனக் கூறும் பிரதமர் மோடி, தமிழகம் இந்திய வளர்ச்சியின் என்ஜின், தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது எனவும் தெரிவிக்கிறார்.

கூட்டாட்சி தத்துவத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறும் பிரதமர் மோடி, மாநிலங்கள் வளரும்போது நாடும் வளரும் எனவும் அதற்காகவே அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளிப்பதாக சொல்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்