பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை 21 தீவுகளுக்கு பெயர் சூட்டுகிறார் பிரதமர் மோடி

பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை 21 தீவுகளுக்கு பெயர் சூட்டுகிறார் பிரதமர் மோடி
Published on

பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை 21 தீவுகளுக்கு பிரதமர் மோடி இன்று சூட்டுகிறார்.

சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23-ம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறும் பராக்ரம் திவாஸ் தினத்தையொட்டி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை பிரதமர் மோடி சூட்டுகிறார்.

21 தீவுகளில், அளவில் மிகப் பெரிய தீவுக்கு முதல் பரம்வீர் சக்ரா விருதைப் பெற்றவரின் பெயர் வைக்கப்படும் என்றும், அடுத்தடுத்த அளவுள்ள தீவுகளுக்கு அடுத்தடுத்து பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேஜர் சோம்நாத் ஷர்மா, நாயக் ஜதுநாத் சிங், மேஜர் பிரு சிங், ஆல்பெர்ட் எக்கா, மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன், கேப்டன் விக்ரம் பத்ரா, லெப்டினென்ட் மனோஜ் குமார் பாண்டே உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த தீவுகளுக்கு வைக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு உரிய மரியாதை அளிப்பது எப்போதுமே பிரதமரால் அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com