ஒப்பந்ததாரரின் கண்ணாடியை உடைத்த எம்எல்ஏ - தீயாய் பரவும் வீடியோ

x

கர்நாடகா மாநில எம்எல்ஏ வெங்கடப்பா, ஒப்பந்ததாரரின் கண் கண்ணாடியை பிடுங்கி கீழே போட்டு உடைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ராய்ச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கவிதாலா பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், மழைநீர் வடிகால் பணியை சரிவர, மேற்கொள்ளவில்லை என கூறி ஒப்பந்ததாரரை கண்டித்தார். பின்னர், ஒப்பந்ததாரர் அணிந்திருந்த கண் கண்ணாடியை பிடுங்கி கீழே போட்டு எம்எல்ஏ உடைத்தார். இதற்கு ஒரு தரப்பு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்