"கொள்கையை காப்பாற்ற எதையும் செய்யலாம், இழக்கலாம் ஆனால்... " - வெளிப்படையாக பேசிய முதல்வர் ஸ்டாலின்

x

கொள்கையை காப்பாற்ற எதையும் செய்யலாம் எதையும் இழக்கலாம், ஆனால் பதவியை காப்பாற்ற எதையும் செய்துவிட முடியாது என முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, டி.கே. சீனிவாசன் எழுதிய புத்தகங்களை வெளியிட, தி.க. தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார்.

பின்னர் பேசிய ஸ்டாலின், திராவிட இயக்கம் என்றாலே எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பகுத்தறிவாளர்கள் இயக்கம் என்றும், இதுபோன்று நிறைய புத்தகங்கள் வெளிவர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பாசறைக் கூட்டங்களில் பங்கேற்ற இளைஞர்கள் இதுபோன்ற புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும் என திமுக தலைவராக கட்டளையிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.


கொள்கை இருந்தால்தான் கட்சி, கட்சி இருந்தால்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின், கொள்கையை காப்பாற்ற எதையும் செய்யலாம், இழக்கலாம் என்றும், ஆனால், பதவியை காப்பாற்ற எதையும் செய்துவிட முடியாது என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்