மிசோரம் கல்குவாரி விபத்து - பிரதமர் மோடி இரங்கல்

x

மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மிசோரம் மாநில கல்குவாரி விபத்தில், இதுவரை11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன; மற்றவர்களின் உடல்களைத் தேடும் பணி நடந்துவருகிறது

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாயும்,

காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்