கிணற்றை காணவில்லை..மாவட்ட நிர்வாகத்திற்கு ஊர்மக்கள் அதிரடி
சிவகங்கை அருகே கிணற்றை காணவில்லை என வடிவேலு பாணியில், பொதுமக்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், முதுவந்திடல் கிராமத்தில் உள்ள திறந்த வெளி குடிநீர் கிணறு வற்றிய நிலையில் காணப்படுகிறது.
இதனை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வரவெண்டுன அப்பகுதி மக்கள் கிராம நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தனி நபர் ஒருவர் கட்டுமான பணியின் போது கிணற்றை மூடியதாக கூறப்படுகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள கண்மாயும் ஆக்கிரமிப்பில் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர், வடிவேலு காமெடி பாணியில் கிணற்றை காணவில்லை என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
Next Story
