காணாமல் போன சிலைகள்.. கண்டுபிடிக்க நடத்தப்பட்ட தொடர் பூஜை... ஒரு வருடத்தில் நடந்த அதிசயம்
திண்டுக்கல்லில் உள்ள கோயிலில் கடந்த ஆண்டு கொள்ளையடிக்கப்பட்ட 5 சிலைகள் கண்டறியப்பட்ட நிலையில், கோயிலில் 1 வருடமாக சிலைகள் கிடைக்க சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது தெரிய வந்துள்ளது. வடமதுரை அருகே உள்ள கோயிலில் பூசாரிகளைக் கட்டி போட்டு கத்தி முனையில் 5 உலோக சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் 4 பேரைக் கைது செய்த போலீசார் சிலைகளை பத்திரமாக மீட்டனர். இந்நிலையில், சிலைகள் மீண்டும் கிடைப்பதற்காக, கோயிலில் காணாமல் போன சிலைகள் இருந்த இடங்களில் 1 வருடமாக விளக்கேற்றி வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், இன்று அவை மீண்டும் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story