காணாமல் போன கிரிக்கெட் வீராங்கனை...காட்டில் கிடைத்த சடலம் - போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

x

ஒடிசாவில் காணாமல் போன கிரிக்கெட் வீராங்கனை வனப்பகுதியில் மரத்தில் தூக்கிய தொங்கியப்படி கண்டெடுக்கப்பட்டார். ஒடிசாவின் கட்டக் பகுதியை சேர்ந்த ராஜஸ்ரீ ஸ்வைன், கடந்த 11ம் தேதியில் இருந்து காணவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கில் தொடங்கியபடி ராஜஸ்ரீ ஸ்வைனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அருகில் அவரது இருசக்கர வாகனம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. உடலிலும், கண்ணிலும் காயங்கள் இருந்ததாக கூறும் போலீசார், கிரிக்கெட் வீராங்கனையின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்