ஏவுகணை மழை பொழிந்த ரஷ்யா - பரிதாபமாக பலியான உயிர்கள்.. பரிதவிக்கும் உக்கரைன்

x

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை மழை பொழிந்தது...

உக்ரைன் மீது 70 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்ய படைகள் ஏவியுள்ளன...

போர் துவங்கியதில் இருந்து நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களும் இதுவும் ஒன்றாகும்...

இதனால் அந்நாட்டின் 2வது மிகப்பெரிய நகரமான கார்கிவில் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

அத்துடன் நாடு முழுவதும் அவசர கால மின்சார துண்டிப்பு நிகழ்த்தப்பட்டது. ஏவுகணை தாக்குதலில் மத்திய உக்ரைனில் உள்ள கிரிவி ரிஹ் நகரின் குடியிருப்பில் வசித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேபோல் கெர்சன் பிராந்தியத்திலும் ஒருவர் பலியானார். ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவால் நிறுவப்பட்ட அதிகாரிகள் 12 பேர் உக்ரைன் படைகள் தாக்குதலில் உயிரிழந்தனர்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, இன்னும் பல தாக்குதல்கள் நடத்த ரஷ்யாவிடம் போதுமான ஏவுகணைகள் உள்ளதாக குற்றம் சாட்டியதுடன், அதனால் மேலும் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்க வேண்டும் என மேற்கு நட்பு நாடுகளை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்