இன்று கூடும் தமிழக அமைச்சரவை... முதன் முறையாக பங்கேற்கும் அமைச்சர் உதயநிதி

x

இன்று கூடும் தமிழக அமைச்சரவை... முதன் முறையாக பங்கேற்கும் அமைச்சர் உதயநிதி


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.


ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த மாதம் சட்டசபை கூட்டத் தொடர் 9-ந் தேதி தொடங்க உள்ளது. முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். ஆளுநர் ஆற்றும் உரையில் இடம் பெறும் கருத்துகள், திட்டங்கள் போன்றவை இந்த அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட உள்ளது. அதுபற்றி அமைச்சரவை ஆலோசித்து அங்கீகாரத்தை வழங்கும்.

அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டப்படும் கூட்டத்தில், அவர் உட்பட அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்