ஈபிஎஸ்-க்கு அமைச்சர் பதிலடி | EPS | ma subramanian

x

நீட் விவகாரத்திதில் மக்களை திசை திருப்பும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நீட் வழக்கை தமிழக அரசு ஒத்திவைக்க கோரியதை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, வழக்கை திறம்பட நடத்தாமல் அரசு நாடகம் நடத்துவதாக விமர்சித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் இயலாமையை ஒப்புக்கொண்டு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் அறிக்கையில் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், முந்தைய அதிமுக அரசு, தவறான சட்ட விதிகளைக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறியுள்ளார். இதனால், வழக்கை தொடர்ந்து நடத்துவது தமிழக மாணவர்களுக்கு பாதகமாக அமையும் எனவும், இதன் காரணமாகவே தற்காலிகமாக ஒத்தி வைக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். உண்மை இவ்வாறு இருக்க, எதிர்க்கட்சித் தலைவர் மக்களை திசை திருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்