அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அமைச்சரின் புதிய பிளான்

x

அரசு பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, திங்களன்று, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்கிறார்.சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை அமைச்சர் துவக்கி வைத்து பாட புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்க இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதோடு, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலான பிரசார வாகன சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்கிறார். முதலாம் வகுப்பு உள்ளிட்ட பிற வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வெளியான நிலையிலும் கூட, எல்கேஜி - யுகேஜி மாணவர் சேர்க்கை இருக்குமா என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.


Next Story

மேலும் செய்திகள்