63 வயது அயர்ன் லேடியை நேரில் பாராட்டிய அமைச்சர் - "ஸ்டார் எல்லாம் வேஸ்ட் இவர்தான் பெஸ்ட்"

x

மத்திய பிரதேச மாநிலம் அம்லா பகுதியை சேர்ந்தவர் சுஜாதா ஜடா. 63 வயதான இவர், ராணுவத்தில் 8 ஆண்டுகளும், பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற அவர், காரைக்காலில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார். இது குறித்த செய்தி நமது தந்தி டிவியில் ஒளிபரப்பானது. இதையடுத்து, மருத்துவக் கல்லூரிக்கு நேரில் சென்ற புதுச்சேரி மாநில அமைச்சர் சந்திர பிரியங்கா, சுஜாதா ஜடாவை சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டினார். திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் கழித்து படித்து வருவதாகவும், வெற்றி பெற வயசு தேவை இல்லை என்பதை சுஜாதா ஜடா நிரூபித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சினிமா ஸ்டார்ஸ் எல்லாம் ரோல் மாடல் கிடையாது என்ற அவர், கனவை தூக்கிப் பிடித்து போராடி வெற்றி பெறுபவர்களே ரோல் மாடல் என்று பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்