சைக்கிள் போட்டிகளில் தட்டி தூக்கும் சாதனை மாணவி ஷா.தபித்தா..ஆச்சிரியப்பட வைத்த அமைச்சர் உதயநிதி

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடைக்கு செல்லும் வழியில் உள்ள குட்டையூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஷா.தபித்தா. மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தற்போது தேர்ச்சி பெற்றுள்ளார். இளம் வயது முதலே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்த தபித்தாவுக்கு சொந்தமாக சைக்கிள் வாங்குவதற்கும் போதிய வசதிகள் இல்லை. இதனால், கோவையில் உள்ள தமிழ்நாடு சைக்கிள் அசோசியேசன் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள எல்.என்.சி.பி.இ. பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டே, ஆன்லைன் மூலம் பள்ளி பாடங்களையும் படித்து வந்தார்.

கடந்த ஆண்டு அசாமில் நடந்த 14 வயதுக்குட்பட்டோர் டைம் ட்ரெயில் சைக்கிள் போட்டியில் 500 மீட்டர் தூரத்தை 42 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும், 16 வயதுக்குட்பட்டோர் டீம் டைம் ட்ரெயில் சைக்கிள் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடந்த 10 கிலோமீட்டர் டைம் ட்ரெயில் போட்டியில் தங்கப் பதக்கமும், 20 கிலோமீட்டர் டீம் டைம் ட்ரை போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார்


Next Story

மேலும் செய்திகள்