"பாசிஸ்டுகளை விரட்ட.." பட்டியலை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி

x

திமுக இளைஞர் அணிக்கு புதிய மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை நியமித்து, அதற்கான பட்டியலை அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ள அவர், நாடாளுமன்றத் தேர்தலில் பாசிஸ்டுகளை விரட்டுவதற்காக, இந்திய ஒன்றியம் முழுவதிலும் உள்ள தோழமை சக்திகளை முதல்வர் ஒருங்கிணைப்பதாகவும், அதற்காக அவரின் கரத்தை வலுப்படுத்தும் பொறுப்பு இளைஞரணியிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்