"அமைச்சர் சாமிநாதன் உண்மையாவே சாமி தான்" விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவி

x

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அமைச்சர் சாமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொடைக்கானலில் இருந்து சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு 5 பேர் காரில் சென்று கொண்டிருந்த போது, நொச்சிபாளையம் பகுதியில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த அமைச்சர் சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தங்களது கார்களை நிறுத்தி, காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்