"தமிழர்களை வெறுக்கின்ற ஒரே பிரதமர் மோடி தான்" - அமைச்சர் நாசர் பரபரப்பு பேச்சு

x

தமிழர்கள் திராவிடம் என்றால் வெறுக்கின்ற ஒரே பிரதமர் யார் என்றால் நமது பிரதமர் மோடிதான் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் விமர்சித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 45-வது பிறந்தநாளை ஒட்டி திருமுல்லைவாயில்,சோழாழம்பேடு பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேட்டி சேலை, 100 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நாசர் வழங்கினார். பின்னர் பேசிய அவர், தமிழர்களை தள்ளி வைப்பதுதான் பிரதமர் மோடியின் வேலை என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்