அதிகாரிகளை கடுமையாக கண்டித்த அமைச்சர் மூர்த்தி

x

மதுரையில் தொடர் மழையால் கண்மாய்கள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், விரைந்து பணிகளை முடிக்குமாறு அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுக்கு மிகுந்த கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.

மதுரையில் 2 நாட்களாக பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

கண்மாய்கள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் வருவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மூர்த்தி, புளியங்குளம் கண்மாயில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சட்டமன்ற தொகுதி நிதியில் செய்த பணிகளை முறையாக செய்யவில்லை என குற்றம் சாட்டி விரைந்து முடிக்க கண்டிப்புடன் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்