வட இந்திய மாணவர்களிடம் பாகுபாடா..? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் | Ma Subramanian

கல்லூரிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம், எந்த பாகுபாடும் காட்டவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மருத்துவ கல்லூரியின், இளங்கலை மருத்துவ படிப்பு நிறைவு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், வட இந்திய மாணவர்கள் குறித்து தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com