"கடப்பாரை.. மம்பட்டி நான் எடுக்கணுமா?" - அதிகாரிகளிடம் சீறிய அமைச்சர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இஸ்லாமியர்களின் இடுகாடு குறித்த பிரச்சனை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளச் சென்ற அமைச்சர் மஸ்தான் வருவாய்த்துறை ஊழியர்களை கேள்விகளால் துளைத்தெடுத்தார்.

அனந்தபுரம் பகுதிக்கு சென்ற அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அரசு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளில் உள்ளவற்றை கேட்டறிந்தார்.

அப்பொழுது இடங்களை அளக்க கிராம உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் கடப்பாறை, மண்வெட்டி, கத்தி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வரவில்லையா என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

X

Thanthi TV
www.thanthitv.com