"23ம் தேதி ஒட்டு மொத்த மருத்துவ நிபுணர்களை அழைத்து ஆலோசனை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

x

அடுத்த வாரம் அறுவை சிகிச்சை நிபுணர்களை அழைத்து ஆலோசனை நடத்த உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாட்டு பிரிவு சார்பில் நடைபெற்ற வருடாந்திர தேசிய கருத்தரங்கில் அமைச்சர் மா. சுப்ரமணியன் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர், சுகாதார குறியீட்டில் இந்திய அளவில் தமிழகம் முன்னோடியாக இருப்பதாகவும், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் அரசு மருத்துவ ரிகள் இருப்பதாகவும் தெரிவித்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மருத்துவ பெட்டகம் வழங்குவது விரைவில் ஒரு கோடியை நெருங்கும் என்ற அமைச்சர், இந்தியாவிலேயே அறுவை சிகிச்சை தணிக்கை செய்வது தொடர்பாக தமிழகத்தில் மட்டும் தான் கூட்டம் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்