அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு முற்றுகை.. ஒன்றாக திரண்ட தூய்மை பணியாளர்கள்

x

திண்டுக்கல் மாவட்டம், துரைராஜ் நகர் பகுதியில் உள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீட்டின் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டின் முன் திரண்ட ஆண்-பெண் தூய்மைப் பணியாளர்கள் நிரந்தர பட்டா வழங்க கோரி அமைச்சரின் வீட்டு வாசல் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

அமைச்சர் வீட்டில் இல்லாத காரணத்தினால் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்