ஹாக்கி விளையாடி அசத்திய அமைச்சர் கீதா ஜீவன்

ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் கோப்பை தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னையில் ஆகஸ்ட் 3ம் தேதி ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில், பாஸ் தி பால் (Pass the ball)சுற்றுப்பயணத்தின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்த கோப்பையை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் ஹாக்கி விளையாடி மகிழ்ந்தார். மேலும், ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com