தந்தையும் இல்லை, கால்களை இழந்த தாய் - குடும்பத்துக்காக சிறுமி செய்த தியாகம் - வீடு தேடி சென்ற அமைச்சர்

x

தந்தையும் இல்லை, கால்களை இழந்த தாய் - குடும்பத்துக்காக சிறுமி செய்த தியாகம் - வீடு தேடி சென்ற அமைச்சர்

தந்தை இல்லாத நிலையில், தாயும் கால்களை இழந்து விட 14 வயதில் குடும்ப பாரத்தை சுமக்க நேர்ந்த சிறுமிக்கு படிப்பை தொடர வழி வகை செய்த அமைச்சர் காந்திக்கு பாராட்டுகள் குவிகிறது. ராணிப்பேட்டை மாவட்டம், புளியங்கன்னு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி பாபு-மல்லிப்பூ. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். பாபு உயிரிழந்த நிலையில், மல்லிப்பூ பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் நூல் பொருள்களை வீதி வீதியாகச் சென்று விற்பனை செய்து குடும்பத்தை பராமரித்து வந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் நடந்த விபத்தில், மல்லிப்பூ கால்களை இழந்து விட, 14 வயதான செல்வி தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தன் தாயாரின் தொழிலை செய்யத்தொடங்கினார். இதையறிந்த அமைச்சர் காந்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் சிறுமியின் இல்லத்திற்குச் சென்று சிறுமியின் குடும்பத்தினருக்கு வீடு கட்டித் தருவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் மூலமாக வழங்கி, சிறுமியின் சகோதரர், பழனிக்கு தொழிற்சாலையில் பணி புரிவதற்கான ஆணையையும் வழங்கினார். மேலும், சிறுமியின் கல்வியை தொடரும் வகையில் அமைச்சர் ஏற்பாடுகளைச் செய்தார். அமைச்சரின் செயலுக்கு மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்