அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் துரைமுருகன்- பேரவையில் நடந்த சுவாரசியம்

x

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்களை மீண்டும் அவைக்கு வருமாறு சபாநாயகரும், அமைச்சர் துரைமுருகனும் அழைப்பு விடுத்தனர்.

சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு அளிக்கவில்லை எனக் கூறி, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜனநாயக முறைப்படி தான் எதிர்கட்சியினருக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சராசரியாக 32 நிமிடங்கள் பேசியுள்ளனர் என்றும் கூறினார். அதைத் தொடர்ந்து பேசிய பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், எதிர்க்கட்சியினரை அவை நிகழ்வில் பங்கேற்க அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் அப்பாவு, அதிமுக உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது, சபாநாயகருக்கு மரியாதை கொடுத்து, அதிமுக உறுப்பினர்கள் வர வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகனும் அழைப்பு விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்