ரயில்வே கேட்டை அடித்து தூக்கிய மினி லாரி... அரை மணி நேரம் நின்ற ரயில்

x

கடலூரில், ரயில்வே கேட் மீது மினி லாரி மோதியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர் நகரின் மையப்பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது.

இன்று பிற்பகல் ரயில் கடந்து செல்வதற்காக, இந்த ரயில்வே பாதையை ஊழியர்கள் அடைக்க முயன்றனர்.

அப்போது, மினி லாரி ஒன்று ரயில்வே கேட் மீது மோதி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ரயில்வே கேட்டை மூட முடியாத நிலையில், அந்த வழியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, அங்கு வந்த ரயில்வே போலீசார், லாரியை மீட்டு, ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்தனர் .

இந்த விபத்து காரணமாக சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்