கத்தார் உலக கோப்பைக்காக கோடி கோடியாக பறக்கும் நாமக்கல் முட்டைகள்...| Fifa World Cup 2022 | Qatar

x

நாமக்கல்லில் இருந்து சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மாலத்தீவு, கத்தார் ஆகிய நாடுகளுக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு மாதத்திற்கு 2 கோடி முட்டைகள் வீதம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், தற்போது கத்தார் நாட்டில் உலக கால்பந்துப் போட்டி நடைபெறுகிறது. இதனால் போட்டியில் பங்கேற்கும் நாடுகள் உள்பட உலகம் முழுவதும் இருந்து போட்டியைக் காண பல லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதன்படி மாதந்தோறும் கத்தாருக்கு மட்டும் நாமக்கல்லில் இருந்து 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 மடங்கு அதிகமாக ஒன்றரை கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்