தகாத உறவில் இருந்த சமையல் மாஸ்டரை சுட்டுக்கொன்ற துணை ராணுவ வீரர் - சீர்காழியில் பயங்கரம்

x

சீர்காழி அருகே தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன். இவர் கடந்த 2 ஆம் தேதி சீர்காழி உப்பனாற்று கரையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த மத்திய துணை ராணுவ படை வீரரான தேவேந்திரன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில், தேவேந்திரனின் மனைவியிடம் கனிவண்ணன் தகாத உறவில் இருந்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, தேவேந்திரனின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், உரிய அனுமதி பெறாமல் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி, பிஸ்டல் மற்றும் டம்மி துப்பாக்கி என நான்கு வகையான துப்பாக்கிகளையும், 20 க்கும் மேற்பட்ட தோட்டாக்களையும் பறிமுதல் செய்த நிலையில், தேவேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்