வழிந்த ரத்தம் - நள்ளிரவில் மெரினாவில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை மெரினா கடற்கரையில் இரவில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாக திடீர் சாலை மறியல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கண்ணகி சிலை பின்புறம் உள்ள கடற்கரை மணற்பகுதியில் மாட்டான் குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அவரது உறவினர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது
காவலர்கள் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி திட்டிய நிலையில், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது மெரினா காவல் நிலைய காவலர் யுவராஜ், லத்தியால் தாக்கியதில் வெங்கடேசனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆத்திரம் அடைந்த உறவினர்களும், மாட்டான் குப்ப பொதுமக்களும் மெரினா காமராஜர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ரோந்து காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், போராட்டம் கைவிடப்பட்டது.
