மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்...4ம் சுற்றுக்கு அல்கராஸ் முன்னேற்றம்

x

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் 4ம் சுற்றுக்கு ஸ்பெயின் இளம் வீரர் அல்கராஸ் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ம் சுற்றுப் போட்டியில் செர்பிய வீரர் லாஜோவிக் உடன் நம்பர் ஒன் வீரரான அல்கராஸ் மோதினார். முதல் செட்டில் அதிரடி காட்டிய அல்கராஸ், 6க்கு பூஜ்யம் என்ற கணக்கில் அதனைக் கைப்பற்றினார். எனினும் 2வது செட்டில் லாஜோவிக் சற்று சவால் அளித்தார். இறுதியில் 2வது செட்டை டை-பிரேக்கரில் 7க்கு 6 என்ற கணக்கில் கைப்பற்றி அல்கராஸ் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் நான்காம் சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீரர் டாமி பால் உடன், அல்கராஸ் மோதவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்