மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடர்..சாம்பியன் பட்டம் வென்றார் ஆஸி. வீரர் டி-மினார்

x

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் டாமி பால் (PAUL ) உடன் டி-மினார் மோதினார். இதில் முதல் செட்டை 6க்கு 3 என்ற கணக்கில் பால் வென்றார். எனினும் பின்னர் சுதாரித்து ஆடிய டி-மினார், 6க்கு 4, 6க்கு 1 என்ற கணக்கில் அடுத்தடுத்த செட்களைக் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை முத்தமிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்