மெட்ரோ ரயில் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட பூங்கா; நேரில் ஆய்வு - ஐகோர்ட் நீதிபதி அறிவிப்பு!

x
  • மெட்ரோ ரயில் திட்டத்துக்காக கையகபடுத்தப்பட்ட ஷெனாய்நகர் திருவிக பூங்காவின் சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
  • மெட்ரோ பணிக்காக ஷெனாய்நகரில் 8.8 ஏக்கர் பரப்பளவில் உள்ள திருவிக பூங்கா 2011ம் ஆண்டு மூடப்பட்டு சீரமைக்கப்பட்டது.
  • இந்த நிலையில் பூங்கா சீரமைக்கப்பட்டது தொடர்பான வழக்கில், மெட்ரோ பணிக்காக பூங்காவில் இருந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதாக வழக்கறிஞர் சி.மோகன் அளித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.
  • இந்த நிலையில் வழக்கின் விசாரணைக்காக பூங்காவை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்துள்ளார்.
  • முன்னதாக பூங்கா சீரமைப்பு பணியில் நடைபாதைகள், ஸ்கேட்டிங் ரிங்க், பேட்மிண்டன் மைதானம், கூடைப்பந்து மைதானம், கிரிக்கெட் பயிற்சி வலை, வெளிப்புற உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாடும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்