கேர்ள் பெஸ்டிக்கு கொஞ்சி கொஞ்சி மெசேஜ்.."கேட்டதுக்கு காது ஜவ்வை கிழிச்சிட்டாரு" - தேனிலவில் அட்டகாசம் செய்த கணவன்

x

சென்னை, பூந்தமல்லி அருகே குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்க சென்ற போது தாக்கப்பட்டதாக கர்ப்பிணி பெண் வக்கீல் காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் அர்ச்சனா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பல் மருத்துவரான ஜெயகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், ஹனிமூனுக்காக யூரோப் சென்ற போது ஏற்பட்ட தகராறில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதில், திடீரென கணவர் சமாதானம் பேச அழைத்த நிலையில், சவிதா என்ற கர்ப்பிணி பெண் வக்கீலுடன் கணவரின் வீட்டிற்கு அர்ச்சனா சென்றுள்ளார். அங்கு, பேச்சுவார்த்தையின் போது மீண்டும் தகராறு ஏற்படவே, பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக அழைத்துவரப்பட்ட பெண் வக்கீலை, ஜெயகிருஷ்ணன் மற்றும் அவரது தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து 8 பேர் மீது புகாரளித்ததாகவும், அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சவிதா குற்றம்சாட்டினர். இந்நிலையில், தனது தயாருடன் காவல்நிலையம் வந்த வக்கீல் சவீதா, பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்