"வன்முறையின் வியாபாரி" - பாஜகவை விளாசிய மம்தா

மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவை "வன்முறையின் வியாபாரி" என்று விமர்சித்தார்...

மேலும், அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், "இந்தியாவில் ​​ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் இந்தியாவுடையது" எனவும் பெருமையாகக் கூறுவதாகவும், ஆனால், உண்மையில் பாஜக பிற கட்சிகளுடன் இணையாது தனித்து செயல்பட்டு, மிகவும் கொடூரமாக ஆட்சி நடத்துவதாகவும் அவர் கண்டித்தார்... அத்துடன், இந்திய கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மணிப்பூர் நிலைமை குறித்து விவாதித்து வருவதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்..

X

Thanthi TV
www.thanthitv.com