"முதல் முறையாக மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை" - வெளியான அறிவிப்பு | Kerala

x

கேரளாவில் முதல்முறையாக மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளித்து கொச்சின் பல்கலைக்கழகம், உத்தரவிட்டுள்ளது. கொச்சியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செமஸ்டரின் வேலை நாட்களில் 2 சதவீதம் மாதவிடாய் விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவிகளுக்கு 60 நாட்களுக்கு பிரசவ கால விடுமுறை அளிப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்