"அத்துமீறி உடலை தொடும் ஆண்கள்.." "விரட்டி வந்து கார்னர் செய்து..." நாடாளுமன்றத்தில் அதிர்வை கிளப்பிய பெண் MP

x

ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை என அந்நாட்டு செனட் சபையில் பெண் எம்.பி. பேசியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த ஒரு தொகுப்பு உங்கள் பார்வைக்கு

லிடியா தோர்பே, ஆஸ்திரேலியா எம்.பி.

(நாடாளுமன்ற வளாகத்தில் என்னால் பாதுகாப்பாக நடக்க முடியவில்லை. பலம் வாய்ந்த ஆண்கள் பாலியல்ரீதியாக கமண்ட் அடிக்கிறார்கள். மாடிப்படிகளில் நடக்க முடியவில்லை. சிசிடிவி கேமராக்கள் இல்லாத பகுதியில் விரட்டி வந்து கார்னர் செய்து அத்துமீறுகிறார்கள். பாலியல் ரீதியாக அத்துமீறி தொடுகிறார்கள். செல்வாக்கு மிக்கவர்கள் பாலியல் உறவுக்கு வறுமாறும் அழைப்பு விடுக்கிறார்கள்.. நான் மட்டுமல்ல, இங்கு வேலை பார்க்கும் பெண்கள் பலரும் இந்த பாலியல் சீண்டல்களை தெரிந்திருப்பார்கள்.. பாலியல் சீண்டல்களிலிருந்து பெண்களை காக்க இங்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்....)

இப்படி கண்ணீர் மல்க பேசுபவர் ஆஸ்திரேலியா சுயேட்சை எம்.பி. லிடியா தோர்பே... ஆஸ்திரேலியா நாடாளுமன்ற செனட் சபையில் பேசியபோதுதான், அந்நாட்டு நாடாளுமன்றம் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்பதை பட்டியலிட்டிருக்கிறார். நாட்டின் பாதுகாப்பையும், அமைதியையும் உறுதி செய்ய சட்டம் இயற்றும் நாடாளுமன்ற வளாகத்திலேயே பெண்கள் அச்சத்துடன் நடமாடுவதாக கூறுகிறார் லிடியா தோர்பே...

நாடாளுமன்றத்தில் தனது அலுவலகத்திலிருந்து வெளியேறே வேண்டும் என்றாலே, யாரேனும் அங்கு உள்ளார்களா...? என்று பார்த்துதான் வெளியே வருவதாகவும், பாதுகாப்பை உறுதி செய்ய யாராவது உடன் வருவார்களா...? என்று பார்த்துதான் வருவதாகவும் கூறியிருக்கிறார்.

அப்போது ஆஸ்திரேலியா கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த டேவிட் வான் தன்னிடம் தகாத முறையில் நடந்ததாகவும் தெரிவித்தார். லிடியா பேச்சு நாடாளுமன்றத்தில் இருந்தவர் களை அதிர்ச்சியடைய செய்தது. குற்றச்சாட்டை அடுத்து டேவிட் வான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவிகள் பொருத்தப்படும் என செனட் சபை தலைவர் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாலியல் தொல்லை என்ற குற்றச்சாட்டு ஒன்றும் புதிதல்ல.. ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு பெண் ஒருவர், பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்திலேயே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக கண்ணீர் சிந்தியிருந்தார். அதுகுறித்த விசாரணை தொடங்கிய போது, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அந்நாட்டு பிரதமரே மன்னிப்பு கேட்டிருந்தார்.

அப்போது ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பணியாற்றும் பெண்களிடம் குறைகள் குறித்து பேசிய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், 63 % பெண்கள் நாடாளுமன்றத்தில் பாலியல் ரீதியான சீண்டலுக்கு உள்ளாகியதாக தெரிவித்தது அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்போது எம்.பி.யே பாலியல் தொல்லை குறித்து விரிவாக பேசியிருப்பது ஆஸ்திரேலியாவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்