"இந்தியாவில் ஒருநாளில் பெண்களை விட ஆண்களுக்கே அதிக வருமானம்" - தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

x

இந்தியாவில் ஒருநாளில் பெண்களை விட ஆண்களே அதிக வருமானம் பெறுவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. நாட்டில் உள்ள கிராம மற்றும் நகர்ப்புறங்களில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், தேசிய புள்ளியியல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் ஆண்களின் ஒருநாள் சராசரி வருமானம் முறையே 393 மற்றும் 483 ரூபாயாக உள்ளது. அதேசமயம் பெண்களின் ஒருநாள் சராசரி வருமானம் முறையே 265 மற்றும் 333 ரூபாயாக உள்ளது. விதிவிலக்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் நகர்ப்புற பகுதிகளில் மட்டும், ஆண்களை விட பெண்களின் ஒருநாள் வருமானம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்